2023 / 2024 ஆம் கல்வியாண்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்றுமுதல் இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, June 14th, 2024

2023 / 2024 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (14) முதல் இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 6 மணி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: