2023 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவு!
Friday, July 21st, 2023
2023 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைகின்றது. இதற்கமைய இரண்டாம் தவணைக்கான பாடசாலை எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன் இரண்டாம் தவணைக்கான பாடசாலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கமைய ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டாம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் நொவெம்பர் மாதம் 12 ஆம் திகதி நிறைவடையும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி முடிவு - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு - இறக்குமதி செய்யப்படும் சிமெந்துக்கு விதிக்கப்படும...
எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் - நீதி அமைச்சர் விஜயத...
|
|
|


