2023 இல் இது வரை 7,500 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
Thursday, February 9th, 2023
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7,647 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் 6,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை பெப்ரவரியில் இது வரை 1,150 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த மாதம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து தலா 1,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
பெப்ரவரி மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 218 டெங்கு நோயாளர்கள், புத்தளத்தில் 172 டெங்கு நோயாளர்கள் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் 130 டெங்கு நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


