2023 இல் இதுவரை 27 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 27 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
மேலும் துப்ப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சீருடை வவுச்சர்கள் அடுத்த வாரம்!
சர்வதேச ரீதியில் இலங்கைப் பொலிஸார் முன்னணியில்!
தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டுள்ள யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி!
|
|
|


