2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை – தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
Saturday, November 4th, 2023
2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை டிசம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிவரை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனை கூறியுள்ளார.
அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட பாடசாலை விடுமுறை டிசம்பர் 22 ஆம் திகதி வழங்கப்பட்டு மீண்டும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
இரண்டாம் தவணை கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் 27 ஆம் திகதி நிறைவடைந்திருந்தது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்காக, நவம்பர் மாதம் முதலாம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வட்டுக்கோட்டையில் 19 வயது யுவதியைக் காணவில்லை என முறைப்பாடு!
வலிகாமம் தெற்கு முன்பள்ளிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!
பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் - ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|
|


