டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அனைத்து வைத்திய உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன – அமைச்சர் ராஜித !

Wednesday, July 18th, 2018

டெங்கை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான வைத்திய உபகரணங்கள், சிகிச்சை வசதிகள், வாகனங்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள் போதுமான அளவில் தேவையான இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

கடந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86 ஆயிரம் ஆகும். இவ்வருடத்தில் பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரம் ஆகும்.

டெங்கு நோயை ஒழிப்பதற்காக 1500 இளைஞர், யுவதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயரதிகாரிகளிலிருந்து தொழிலாளர்கள் வரையில் மேற்கொண்ட அர்ப்பணிப்பின் காரணமாகவே டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடிந்தது என்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts: