2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!!

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (15) ஆரம்பமாகியுள்ளது.
அத்துடன் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடைபெறும்.
அதேவேளை, மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஒத்திவைப்பு விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இம்மாதம் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், அன்றையதினம் பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதேநேரம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நடத்தப்பட்டு மூன்றாம் சுற்று வாக்கெடுப்பு எதிர்வரும் 8ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்ப கால எல்லை நீடிப்பு!
50 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான முறிகள் வெளியீடு!
வடமாகாண விவசாய பயிற்சி நிலையத்தில் பருவகால தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு ஈ.பி.டிபி யி...
|
|