நாட்டின் முக்கிய வீதிகளை அபிவிருத்தி செய்ய திட்டம் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Thursday, September 9th, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கிற்கு அமைய நாடு முழுவதையும் உள்ளடக்கிய முக்கிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் தற்போது செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இது நாட்டின் அனைத்து மாகாணங்களையும் மாவட்டங்களையும் உள்ளடக்கியது. இந்த வீதி அபிவிருத்தி திட்டத்திற்கு இணையாக, மேல் மாகாணத்தில் தேசிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கம்பஹா நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அடையாளம் காணப்பட்ட அனைத்து வீதிகளையும் விரிவுபடுத்தவும், துரிதமாக அபிவிருத்தி செய்யவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு பிரதான கொறடாவும் நெடுஞ்சாலை அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலுள்ள தேசிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கம்பஹா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அடையாளம் காணப்பட்ட அனைத்து வீதிகளையும் அகலப்படுத்தி அபிவிருத்தி செய்யுமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளருக்கு தான் அறிவுறுத்தியதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கம்பஹா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக நெடுஞ்சாலை அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன 15 வீதிகளை விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்வதற்காக அடையாளம் கண்டுள்ளதாகவும், அந்த வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்பத் திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: