2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை நவம்பர் மாதம் நாடாளுமன்றில் முன்வைக்க தீர்மானம்!
Saturday, October 2nd, 2021
அடுத்த ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாளைமறுதினம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் நிதியமமைச்சரினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
பாதீடு மீதான விவாதம் 7 நாட்கள் இடம்பெறவுள்ளதோடு 16 நாட்களுக்கு குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் 5 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஆசிரியர் நியமனங்கள் குறித்து மேன்முறையீடு செய்யமுடியும் - இராஜாங்க கல்வி அமைச்சர் !
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து - சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக் அறி...
அரிசி கையிருப்பை மறைத்து அரிசி தட்டுப்பாடு இருப்பதாக வியாபாரிகளும் விவசாயிகளும் நாடகமாட முயற்சி - வி...
|
|
|


