2018 ஆம் ஆண்டு தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 2,518 பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்க திறைசேரி அனுமதி!
Friday, October 13th, 2023
2018 ஆம் ஆண்டு தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 2,518 பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்க திறைசேரி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடி காரணமாக முதற்கட்டமாக ஆயிரம் பயிலுனர்களுக்கு நியமனம் வழங்க முன்மொழியப்பட்டது.
எனினும், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினர் முன்வைத்த கோரிக்கையை அடுத்து, சகல தாதியர் பயிற்சியாளர்களுக்கும் நியமனம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அரிசியின் விலை அதிகரிப்பு!
வடக்கு பாடசாலைகளுக்குரிய ரூ.87.5 மில். கைநழுவிப் போனது! மாகாண சபையின் பிடிவாதமே காரணம்!
பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இன்றையதினம் தீர்வையற்ற கடைதிறந்து வைப்பு!
|
|
|


