2017ல் புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் -நிதியமைச்சர்
Thursday, December 22nd, 2016
2017ம் ஆண்டில் புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் சீன அரசாங்கத்தின் முதலீட்டுடன் ஒன்றிணைந்த வியாபாரமாக முன்னெடுத்து செல்லப்படும். இதற்கான முதலீட்டின் பெறுமதி ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தக் காலப்பகுதியில் கூடுதலான நேரடி வெளிநாட்டு முதலீடுகளும் கிடைக்கும். எரிபொருள் சுத்திகரிப்பு, கால்நடை வளங்கள், கடற்றொழில் துறை ஆகிய துறைகளில் கூடுதலான முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார். இதன்மூலம் துரித அபிவிருத்தி நோக்கி நகர முடியும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை தெரிவித்தார்.

Related posts:
யாழ். வர்த்தகர்களுடன் ஈ.பி.டி.பி விஷேட கலந்துரையாடல்!
நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு டெங்கு தொற்று அச்சுறுத்தல் அதிகரிப்பு !
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளத...
|
|
|


