20,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட கப்பல் இன்று இலங்கை வருகின்றது – எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Monday, March 14th, 2022

எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் என எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதகடிப்படையில் 20,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று திங்கட்கிழமை இலங்கையை வந்தடையும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வந்தடைந்த கப்பலில் இருந்த டீசல் தற்போது நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த கப்பல் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வரும் என எதிர்பார்த்திருந்தபோதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தாமதமானது. கப்பலில் 38 ஆயிரத்து 300 மெட்ரிக் தொன் டீசல் இருந்ததாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

டக்ளஸ் தேவானந்தாவுக்கு நாம் என்றும் நன்றியுடையவர்களாகவே இருக்கின்றோம்  - வேலணை - சாட்டிப் பகுதி முஸ...
20 ஆவது திருத்ததை விமர்சிப்பதன் மூலம் எதிர்கட்சிகள் தங்கள் தவறுகளை மறைக்க முயல்கின்றன - அமைச்சர் ந...
சமையல் எரிவாயு நிறுவனங்களை இணைத்து புதிய நிறுவனம் அமைத்திருப்பதன் ஊடாக எரிவாயு விலைகளை குறைக்க வாய்ப...

அமரர் சிங்ஸிலி செல்வக்குமாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரிய...
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள காலப்பகுதிகளில் பொதுப் போக்குவரத்து இடம்பெறாது - இராஜாங்க அமைச்சர...
வடக்கு தொடருந்து பாதை சீரானது - தொடருந்து சேவையும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு மைய...