2000 மெகா வோட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்ய மின்சாரசபை தீவிரம்!

எதிர்காலத்தில் பாரிய மின்சார விநியோகத் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தடுக்கும் முகமாக அதிகளவான மின்சாரத்தை கொள்வனவு செய்ய இலங்கை மின்சாரசபை தயாராகிறதாக தெரிகின்றது.
இதன்படி தற்போது கொள்வனவு செய்யப்பட்டு வரும் 2300 மெகா வோட்ஸ் மின்சாரத்தை 4600 மெகா வோட்ஸாக அதிகரிக்க சபை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான பணிப்புரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மின்சாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் மின்சார தேவை கடந்த மூன்று மாதங்கள் பாரியளவில் அதிகரித்திருந்ததாக இலங்கை மின்சாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
சாதாரணமாக 4 முதல் 5வீத மின்சார தேவையே அவசியம் என்று கருதப்பட்டது. எனினும் கடந்த மூன்று மாதங்களில் அது 7 முதல் 8 வீதம் வரை அதிகரித்திருந்தாக சபை குறிப்பிட்டுள்ளது.
Related posts:
திருமண நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் அந்தந்த பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பொறுப்பான சுகாதார அதி...
கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை இடைநிறுத்த வேண்டாம் - உலக நாடுகளுக்கு சுகாதார ஸ்தாபனம் வலியுற...
சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை கோரிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!
|
|