20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் செப்டம்பரில் சமர்பிக்கப்படும் – நீதி அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை!

இந்த ஆண்டின் செப்டம்பர் நடுப்பகுதியில் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
“அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை இரத்து செய்து அதை 20 வது திருத்தத்துடன் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அத்துடன் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் 19 வது திருத்தத்தின் உட்பிரிவுகள் இரத்து செய்யப்பட்டு திருத்தப்படும் என தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரிஅனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய 20வது திருத்தத்தை அறிமுகப்படுத்துவோம் என்று நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்
மேலும் புதிய வரைபு திட்டங்கள் இந்த ஆண்டின் செப்டம்பர் நடுப்பகுதியில் அமைச்சரவை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|