20 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது – பெற்றுள்ளனர் – சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021

இலங்கையில் இதுவரையில் 20 இலட்சத்து 31 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றையதினத்தில் மாத்திரம் 66 ஆயிரத்து 60 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை 10 இலட்சத்து 99 ஆயிரத்து 92 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி முதலாவது செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றையதினம் ஆயிரத்து 396 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய இதுவரை 3 இலட்சத்து 54 ஆயிரத்து 651 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை 64 ஆயிரத்து 986 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ்செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம், நாட்டில் இதுவரையில் 3 இலட்சத்து 67 ஆயிரத்து 645 பேர் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: