20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் நாளை!
Tuesday, October 20th, 2020
இவ்வாரம் நடைபெறவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நாளையதினம் 21 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், குறித்த விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்கட்சியின் பிரதான ஒருகிணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரி சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
கொரோனா தொற்றாளர் பல்வேறு பகுதிகளில் இருந்து இனங்காணப்பட்டு வருவதாகவும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் அடிப்படையில் கூட்டங்களை நடத்த முடியாது எனவும் அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இரண்டு நபர்களுக்கு இடையில் ஒரு மீற்றர் இடைவெளியை பேணுவது மற்றும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற கொரோனா பரவல் தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு பொருந்தாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


