20ஆவது திருத்த வரைபை வெளியிடத் தயார் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு!

Monday, September 14th, 2020

20 ஆவது திருத்தம் குறித்த புதிய நகல் வரைபை வெளியிட தயாராகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இரு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் சில்வா நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் புதிய நகல்வரைபு குறித்த உத்தரவாதத்தையும் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

20ஆவது திருத்தம் குறித்த நகல் வடிவு குறித்து தாங்கள் வெளியிட்ட கரிசனைகளை கருத்தில் கொண்டு ஜனாதிபதியும் பிரதமரும் உடனடி நடவடிக்கைகளை எடுத்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்துகுமாரதுங்க தனது நன்றியை  இதன்போது தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு பெரும்பான்மை உள்ளபோதிலும் 20ஆவது திருத்தத்தினை நிறைவேற்றுவதற்கான பலம் உள்ளபோதிலும் மக்களின் கரிசனைக்கு பொதுஜன பெரமுனவின் உயர் தலைமை அக்கறை காட்டிய விதத்திற்கு அவர் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய நகல்வடிவை இரத்துச்செய்வதற்கு தயாராகயிருப்பதாகவும் திருத்தப்பட்ட நகல்வடிவை மீள வெளியிட தயார் எனவும்  ஜனாதிபதி குறிப்பிட்டார் என குறிப்பிட்டுள்ள கெவிந்துகுமாரதுங்க சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: