2 வருடங்களின் பின் ஆசிரியர் இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை!

Monday, April 11th, 2022

இரண்டு ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் ஆசிரியர் இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதனடிப்படையில் ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படுவதோடு கொவிட்-19 பரவல் காரணமாக கடந்த காலங்களில் அந்த செயற்பாடு பாதிப்படைந்திருந்தது.

எனினும் தற்போது இடமாற்றத்துக்கு விண்ணப்பிப்பதற்காக இணைய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 35,000 ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் குறித்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஆசிரியர் இடமாற்றம் தாமதடைந்துள்ளதோடு, எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் உடனடியாக அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆசிரிய சங்கங்கள் கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: