2 இலட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, January 11th, 2022

திறந்த சந்தையில் போதுமானளவு அரிசித் தொகை பேணுவதை உறுதி செய்வதற்காக 2 இலட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.

அத்துடன் சம்பா அரிசிகளுக்கு பதிலீடாக  ஒரு இலட்சம் மெற்றிக் தொன் ஜிஆர் குறுகிய தானிய அரிசி வகையை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை,  இந்த ஆண்டு சிறுபோகச் செய்கைக்கு விவசாயிகளுக்கு உள்ளூர் சேதன உர விநியோத்திற்காக உரக் கொள்வனவுக்கான பெறுகை செயன்முறையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான உரமானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி, உள்ளூர் உற்பத்தியாளர்களால் உரிய தரநியமங்களுக்கமைய 2022 ஆண்டு சிறுபோக செய்கைக்கு விநியோகிக்கப்படவுள்ள சுற்றாடல் நேயம்மிக்க உள்ளூர் உரத்தை, இரண்டு அரச உர நிறுவனங்கள்மூலம் கொள்வனவு செய்வதற்கும் விவசாய அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: