2 இலட்சம் சிமெந்து மூடைகள் இலங்கை வருகை – சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!
Thursday, January 27th, 2022
2 இலட்சம் சிமெந்து மூடைகளைத் தாங்கிய மற்றுமொரு கப்பல் நாளையதினம் நாட்டை வந்தடைய உள்ளதாக, சிமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
6 இலட்சம் சிமெந்து மூடைகளைத் தாங்கிய இரண்டு கப்பல்கள் கடந்த வாரம் நாட்டை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், சந்தையில் அதிகரித்துள்ள கேள்வி காரணமாக, சில பகுதிகளில் சிமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை, துறைமுக நகர் மற்றும் நகர வீடமைப்புத் திட்ட நிர்மாணம் உள்ளிட்ட ஏனைய தனியார்த்துறை கட்டுமானப் பணிகளுக்காக அதிக கேள்வி உள்ளதாக சிமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீனவுக்கு இலங்கைக்கும் இடையில் சட்ட கட்டமைப்பை இலகுபடுத்த முயற்சி!
வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் சிறு பொருளாதார பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு நடவடிக்க...
மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடர்பில் அறிவிப்பு!
|
|
|


