வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் சிறு பொருளாதார பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை!

Tuesday, July 6th, 2021

சிறு பொருளாதார பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்காக  விவசாய உபகரணங்கள்  மற்றும் விதைகள்  பெற்றுக்கொடுத்து சிறு பொருளாதார பயிர்ச்செய்கை உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்

இலங்கை அதபிம அதிகாரசபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் பசுமை நிறைந்த சுற்றுசூழலை பாதுகாக்கும் விவசாய உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான விசேட வேலைத்திட்டங்கள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹரிசத சில்வா,  இலங்கை அதபிம அதிகாரசபையின்  தலைவர் அமரநந்த வீரசிங்க மற்றும் இலங்கை அதபிம அதிகாரசபையின் பணிப்பாளர்கள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் அமைச்சில் இன்றையதினம்  இடம்பெற்றது.

இதன்போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக பகுதிகளிலும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்காக  பத்து மாவட்டங்களில் கூட்டெரு உற்பத்தியை அதிகரித்தல், இயற்கை பசளை உற்பத்திக்கு உபகரண உதவிகள் வழங்கல்,   விவசாய உபகரணங்கள் மற்றும் விதைகள் பெற்றுக்கொடுத்து சிறு பொருளாதார பயிர்ச்செய்கை உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் தினங்களில் முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அடுத்த 10 ஆண்டுகளில் உலகளவில் 5 மில்லியனுக்கும் குறைவான பெண் குழந்தைகளே பிறக்கும் - சர்வதேச ஆராய்ச்ச...
வடக்கில் அதிபர் தரம் 1 ஐ சேர்ந்தவ அதிபர்கள் பற்றாக்குறை - 129 பேரே கடமையில் - 21 தரம் 1 அதிபர்கள் கோ...
ஆலயத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் அதன் புனிதத்தன்மை பேணப்படும் - திருக்கோணேஸ்வரத்தில் அமைச்சர் டக்...