2 இலட்சத்து 56 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டது – தொற்றுநோயியல் பிரிவு தெரிவிப்பு!
Saturday, May 15th, 2021
ஒக்ஸ்போர்ட் / அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று வெள்ளிக்கிழமை 11 ஆயிரத்து 385 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் 2 இலட்சத்து 56 ஆயிரத்து நான்கு பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி முழுவதுமாக போடப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்று 61 ஆயிரத்து 882 பேருக்கு சினோஃபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்ட நிலையில் குறித்த தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 2 இலட்சத்த 76 ஆயிரத்து 762 ஆக காணப்படுகின்றது.
இதற்கிடையில் 14 ஆயிரத்து 673 பேருக்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புகையிரத நேர அட்டவனையில் மாற்றம்!
மழையுடனான வானிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறல்!.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46 ஆவது அமர்வுக்கு தலைமை தாங்கும் இந்தியா !
|
|
|


