மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறல்!.
Saturday, March 5th, 2022
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யுக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
அத்துடன் ஊவா மாகாணத்திலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காலையிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
இதேவேளை வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
Related posts:
மாலைதீவில் சுகாதார அமைச்சர்கள் மாநாடு!
வவுனியா தெற்கு பிரதேச சபை சிற்றூழியர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!
5 ஆம் திகதிமுதல் மீண்டும் விலை குறைக்கப்படுகின்றது லிட்ரோ எரிவாயு - எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறி...
|
|
|


