17 நள்ளிரவு முதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை!
Sunday, August 14th, 2016
ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது. இதனையிட்டே இத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பரீட்சார்த்திகளுக்கு பிரத்தியேக வகுப்பு, கருத்தரங்கு, விரிவுரை, பயிற்சிப்பட்டறை, மாதிரி வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகித்தல் மற்றும் பதாதைகள் ஒட்டுவது, துண்டுப்பிரசுரங்களை வழங்குவது, தொலைக்காட்சி வானொலி விளம்பரங்கள் ஆகியவற்றுக்கு 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நடைபெறும் 21 ஆம் திகதிவரை தடைவிதிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
Related posts:
|
|
|


