15 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – வானிலை அவதான மையம் அறிவிப்பு!

Thursday, July 9th, 2020

இலங்கையின் 15 மாவட்டங்களுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா,சப்ரகமுவ மற்றும் தென்மாகாணங்களின் 15 மாவட்டங்களான அனுராதபுரம், திருகோணமலை,பொலநறுவை, மட்டக்களப்பு, மாத்தளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, பதுளை, அம்பாறை, மொனராகலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த பிரதேசங்களில் 75 மில்லி மீற்றர் வரையிலான மழைப்பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இடி மின்னல் தாக்கங்களில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் இடி மின்னல் தாக்கத்தின்போது மின்சாரப் பொருட்கள், ஈருருளி, உந்துருளி, உழவுயந்திரம், படகுகள் போன்ற திறந்த வாகனங்களை தவிர்க்குமாறும் வானிலை அவதான மையம் கோரியுள்ளது.

Related posts: