நிதி ஒதுக்கப்பட்டிருந்தும் பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை – ஜனாதிபதி

Wednesday, February 15th, 2017

பாடசாலைகளில் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார மேம்பாடுகளுக்காக நிதி ஒதுக்கப்படுகின்றபோதும், அவை ஏன் மேம்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

10 பாடசாலைகளுக்கு சென்றால் 8 பாடசாலைகளில் மேசை, கதிரைகள் இல்லைமலசலக்கூடம் மற்றும் குப்பைக் கூடம் என்பன இல்லை. பாடசாலைகளில் மேசை கதிரைகள் என்பவற்றுக்குகூட ஏன் குறைபாடு நிலவுகின்றது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வருடாந்தம் ஒதுக்கப்படுகின்ற நிதியில் பாடசாலைகளுக்கு தேவையான மலசலக்கூடம் மற்றும் குப்பைக்கூடம் என்பவற்றை ஏன் அமைக்கவில்லை என்பதைக் தனக்கு கூறுமாறு ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

z_fea800

Related posts:

கிளிநொச்சி திடீர் சோதனை - 13 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விலை கட்டுப்பாட்டு பிரிவினர் தகவல்...
இலங்கை போன்ற நாடுகளின் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு ஜி20 நா...
பொலிசார் குறித்து பொதுமக்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் - பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்...