15ஆம் திகதி முதல் காத்திருப்பு பட்டியலிலுள்ள சமுர்த்தி பயனர்களுக்கான 5,000 ரூபா வழங்க ஏற்பாடு!
Monday, April 13th, 2020
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் காத்திருப்பு பட்டியலிலுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கான 5 ,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
அத்துடன் இதற்கு தேவையான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
கிராம மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் கிராம மட்டத்தின் பரிந்துரைக்கமைய, பாடசாலை வேன் உரிமையாளர்கள்,முச்சக்கர வண்டி சாரதிகள், சுய தொழலில் ஈடுபடுவோருக்கும் கொடுப்பனவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
Related posts:
நேற்றும் 30 பேருக்கு கொரோனா தொற்று: இனங்காணப்பட்ட நோயாளர்களில் 22 பேர் கடற்படையினர் – இராணுவத் தளபதி...
முகக்கவசம் அணிவதால் 70 சதவீதத்தைக் கட்டுப்படுத்த முடியும் - சுகாதார அமைச்சு!
நாட்டில் கொரோனா மரணம் அதிகரிப்பு!
|
|
|


