13 வருடங்கள் கட்டாயமானது! – பிரதமர் ரணில்

Tuesday, June 7th, 2016

மாணவர்களுக்கான 13 வருட கல்வியானது கட்டாயமானது என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கின் கல்வியானது யுத்தத்தால் வீணாகிப் போனதைப் போல் தெற்கின்கல்வி அரசியல்வாதிகளால் அழிவடைந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் கல்வி அபிவிருத்தியை முன்னேற்றுவதன் நோக்கமே 13 வருடகல்வியை கட்டாயமாக்கும் தீர்மானம் என்று பிரதமர் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரிக்கான பஸ்வண்டியை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட போதே அவர்  இவ்வாறுகுறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாட்டிற்குள் சிங்களம், தமிழ்மொழி போல் ஆங்கில மொழியிலும் தேர்ச்சியைஏற்படுத்தும் கல்வி அணுகுமுறையை பெற்றுக் கொடுப்பதன் அவசியத்தையும் பிரதமர்வலியுறுத்தியுள்ளார்.

625.0.560.320.500.400.197.800.1280.160.95625.0.560.320.500.400.197.800.1280.160.95 (1)  625.0.560.320.500.400.197.800.1280.160.95 (2)

Related posts: