மக்களுக்கான நிவாரணங்கள் விரைவில் வழங்கப்படும் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, July 9th, 2021

நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு நிவாரணங்களை விரைவாக வழங்க ஜனாதிபதி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சசுப் பதவியை ஏற்றுக்கொண்டபின் பெல்லன்வில விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட  அமைச்சர் பசில் ராஜபக்ச ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டின் முழு பொருளாதாரத்தையும் கருத்திற் கொண்டு ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார். நாட்டை பொருளாதார ரீதியில் மீள கட்டியெழுப்ப கடினமாக பாடுப்பட வேண்டியுள்ளது. அதன் பிரதிபலன் விரைவில் கிடைக்க பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை சில தீர்மானங்களை எடுக்கும் போது தந்தையை போன்று கசப்பான சில விடயங்களை செய்ய வேண்டி வரலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அவை மக்களுக்கானது என்பதனால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் இடம்பெற்ற முதலாவது ஊடக சந்தப்பில் இவ்விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

போதைப்பாவனைக்கு எதிராக வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு - மருந்தகக் கட்டுப்பாட்டுத் தேசிய சபையின் தலைவர...
நான்காயிரம் அரச பேருந்துகள் சேவையில் - தடுப்பூசி ஏற்றாதவர்கள் பயணிக்க அனுமதியில்லை என தனியார் பேருந்...
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்ட மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜேதா...