13 ஆம் திகதிமுதல் 18 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் கன மழை கிடைக்கும் வாய்ப்பு – புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Sunday, November 12th, 2023

நாளை திங்கள்கிழமை 13 ஆம் திகதி பிற்பகல்முதல் 18 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.

இவ்வாண்டுக்கான வடகீழ் பருவ மழை தொடர்பில் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இவ்வாண்டுக்கான வடகீழ் பருவ மழையின் முதல் சுற்று  நேற்றுமுன்தினம் முடிவுக்கு வந்தது.

அதேநேரம் இவ்வாண்டுக்கான வடகீழ் பருவத்தின் முதலாவது தாழமுக்கம் 13 ஆம் திகதியளவில் வங்காள விரிகுடாவில்  உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளை 13 ஆம் திகதி பிற்பகல் முதல் 18 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக 14, 15, 16 நவம்பர் 2023 திகதிகளில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை முதல் மிகக் கனமழை   கிடைக்கும் வாய்ப்புள்ளது என அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: