குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு..!!

Wednesday, December 21st, 2016

குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பயிற்றங்காய் -160ரூபா, ஒரு கிலோ உருளைக்கிழங்கு – 110ரூபா தொடக்கம் 140ரூபா வரை, ஒரு கிலோ புடலங்காய் – 80ரூபா,              ஒரு கிலோ வெண்டிக்காய் – 80ரூபா, ஒரு கிலோ கத்தரிக்காய் – 70ரூபா,     ஒரு கிலோ கரட் – 60ரூபா, ஒரு கிலோ பச்சை மிளகாய் – 80ரூபா,          ஒரு கிலோ வெங்காயம் – 50ரூபா தொடக்கம் 90ரூபா வரை,               ஒரு கிலோ தக்காளி – 50ரூபா, ஒரு கிலோ கோவா – 20ரூபா,              ஒரு பிடி கீரை – 60 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. இதேவேளை, முன்னர் 25 ரூபா முதல் 35 ரூபா வரை விற்கப்பட்டு வந்த தேங்காய் ஒன்று தற்போது 40 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

யாழ். குடாநாட்டில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நீடித்த அடை மழை காரணமாக வலிகாமம் உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் மரக்கறி பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளமையாலும், பெரும்போக மரக்கறிப் பயிர்ச் செய்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாலும் சந்தைக்கு எடுத்து வரப்படும் மரக்கறிகளின் அளவு முன்னரை விடக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவே மரக்கறிகளின் விலை அதிகரிப்பிற்கான காரணமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

DSC00019-720x480

Related posts: