12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு ஆயிரத்து 5 ரூபாவால் இன்று நள்ளிரவுமுதல் விலைக்குறைப்பு – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!!
Tuesday, April 4th, 2023
12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 5 ரூபாவால் குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் விலை குறைக்கப்படவுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 3 ஆயிரத்து 738 ரூபாவாகும்.
அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 402 ரூபாவால் குறைக்கப்படுகிறது.
இதன்படி அதன் புதிய விலை ஆயிரத்து 502 ரூபா என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதுதவிர 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 183 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சுயாதீன தேர்தல்கள் ஆணையகத்தின் அதிகாரங்கள் தேர்தல் ஆணையாளர் நாயகத்திடம் கையளிப்பு!
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச - அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இடையே உரையாடல்!
கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - குடிவரவு குடியகல்வு திணைக்களம் தகவல்!
|
|
|


