12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி – பரிந்துரைகள் இந்த வாரத்தில் கிடைக்கும் என நம்புவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவிப்பு!
Wednesday, February 23rd, 2022
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான பரிந்துரைகள் இந்த வாரத்தில் கிடைக்கும் என நம்புவதாக மருந்து வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கத்திடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என்றும் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..
கடந்த வாரத்தில் தோராயமாக 50,000 முதல் 60,000 பேர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், ஆனால் ஒமிக்ரோன் வைரஸ் மாறுபாட்டின் விரைவான பரவல் காரணமாக தடுப்பூசி பெறும் வேகம் போதுமானதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இதேநேரம் “12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கத்துடன் ஆலோசனை நடத்தினோம். குறிப்பாக ஒமிக்ரோன் பரவும் வேகத்தைக் கருத்தில் கொண்டு அதை புள்ளி நிலைக்கு கொண்டு வருவோம் என்று நம்புகிறோம்.
எதிர்காலத்தில், தடுப்பூசி போடப்பட்டவர்கள் தங்கள் முககவசங்களை அகற்றுவதன் மூலம் பயனடைய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


