1000 கிலோ கிராம் போதைப் பொருட்களை அழிப்பதற்கு நடவடிக்கை!

Monday, March 18th, 2019

நாட்டில் இதுவரை மீட்கப்பட்ட போதைப் பொருட்களில் 1000 கிலோ கிராம் போதைப் பொருளை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான சட்ட விதிமுறைகள் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

இதேவேளை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினூடாக போதைப் பொருட்களை அழிப்பதற்கான விஞ்ஞான ரீதியான முறைமை குறித்து கலந்துரையாடப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சமந்தகுமார கித்தலவாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts:


நடைப்பாதையில் வாகனங்களை நிறுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
சிறுமி சிகிச்சை பெற்றுவந்த போது வாக்கு மூலம் பெறப்படவில்லை - அதிகாரிகள் எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்...
சர்வதேச நாணய நிதியமும் ஜப்பானும் இலங்கைக்கு உதவப்போவதில்லை என வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பான...