100 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !

பதவியா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 100 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதவிய ஶ்ரீபுர ஜயந்தி மஹா வித்தியாலயத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 07 ஆசிரியர்களும், பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் பாடசாலையின் சிற்றூழியர்கள் சிலரும் குளவிக் கொட்டு காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு சிகிச்சைக்காக ஶ்ரீபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் மேலதிக சிகிச்சைக்காக பதவியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
மீனவர் சுட்டுக் கொலைதொடர்பான விசாரணை அறிக்கை இரு வாரங்களில் - கடற்படை!
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 5 வட்டாரங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னணியில்!
இலங்கையின் 23 ஆவது இராணுவ தளபதி இன்று நியமனம்?
|
|