100 கோடி கிளிசீறியா மரக்கன்றுகளை நடும் திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்!

Friday, October 21st, 2016

தேசிய மர நடுகைத் தினத்தை முன்னிட்டு 100 கோடி கிளிசீறியா மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று ஆரம்பமாகிறது. முதலாவது மரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டி ஆரம்பிக்கவுள்ளார்.

இது தொடர்பான வைபவம் இன்று திருகோணமலையில் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் சங்கைக்குரிய அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். செமா நிறுவனத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர்இநத விடயங்களை குறிப்பிட்டார்.

இலங்கையில் சுற்றாடல் நேய கொள்கைகளின் அடிப்படையில் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். சிங்கப்பூர் முன்னுதாரணமோ, அபிவிருத்தியடைந்ததாகக் கூறப்படும் நாடுகளின் அபிவிருத்தி மாதிரிகளோ இலங்கைக்குப் பொருந்த மாட்டாதென சங்கைக்குரிய ரத்ன தேரர் இதன்போது மேலும் குறிப்பிபட்டார்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய கலாநிதி ஜயந்த குணதிலக, கிளிசீறியாவின் மூலம் உயிரியல் நைதரசனைப் பெற முடியுமென்றார். இந்தத் தாவரத்தைப் பயன்படுத்தி அனல் மின் வலுவை உற்பத்தி செய்வதன் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும் என்று தெரிவித்தார்.

maithrim-kk-720x4801

Related posts: