10 இலட்சத்துக்கும் அதிகமானோர் வறட்சியால் பாதிப்பு!

Saturday, January 21st, 2017

நாட்டின் 7 மாகாணங்களில் 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களே வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.கிழக்கு மாகாணத்தில் 32,4329 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 2,87,507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேல் மாகாணத்தில் கம்பஹா, களுத்துறை மாவட்ட மக்களும் வறட்சியால் அவதியுறுவதாக இடர் முகாமைத்துவம் தெரிவித்தது.

இதேவேளை, மத்திய மாகாணத்தில் 7435 பேரும் தென் மாகாணத்தில் 34,841 பேரும் ஊவா மாகாணத்தில் 41,421 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

kilinochchi_dry_land_002

Related posts: