விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தை தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை !

Saturday, January 4th, 2020


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தை தொடர்ந்து வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நாட்டின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அதன் மூலம் பொது மக்களுக்கான நன்மையை அதிகரிப்பதற்கும் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த திட்டங்கள், புதிய அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இந்த விடயத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்ததுடன் விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக கடந்த அரசாங்க காலப்பகுதியில் செலுத்தப்பட வேண்டிய 3 பில்லியன் ரூபா மானியத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உரத்துக்கு செலுத்தப்பட வேண்டிய தொகை உரிய முறையில் செலுத்தப்படாமையால் நாட்டில் உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உர மானியத்தை மீண்டும் வழங்குவதுடன் நச்சுத்தன்மை அற்ற உணவுப் பயிர் உற்பத்திக்கான சேதன பசளை உற்பத்தியையும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: