வடக்கு ரயில் மார்க்க நேர அட்டவணையில் இன்றுமுதல் மாற்றம்!

Thursday, August 1st, 2019

வடக்கு ரயில் மார்க்கத்தின் நேர அட்டவணையில் இன்றுமுதல் (1) மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தலைமன்னாரிலிருந்து அநுராதபுரம், மதவாச்சி ஊடாக கொழும்பு கோட்டை வரை காலை மற்றும் இரவு வேளைகளில் பயணிக்கும் ரயில், இன்று முதல் கோட்டையிலிருந்து தலைமன்னார் – யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை வரை பயணிக்கவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கு அமைவாக 4081 என்ற இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் காலை 8.50க்கு புறப்பட்டு யாழ் ரயில் நிலையத்தை 6.31 ற்கு சென்றடையும்.

அத்துடன், 4087 இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் மாலை 7.15க்கு புறப்பட்டு யாழ் ரயில் நிலையத்தை மறுநாள் காலை 4.20 மணிக்கு சென்றடையும்.

இன்றுமுதல் தலைமன்னார் ரயில் நிலையம் வரையில் செல்லும் 4087 என்ற இலக்க தபால் ரயில் பிற்பகுதியில் பயணிகளின் வசதிகருதி 3 ரயில் பெட்டிகள் பயணிகளுக்காக இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் பெட்டிகள் அநுராதபுரம் ரயில் நிலையத்தில் அகற்றப்பட்டு 4453 இலக்க ரயிலாக நள்ளிரவு 12.50க்கு அநுராதபுரம் ரயில் நிலையத்தல் இருந்து தலைமன்னார் ரயில் நிலையம் வரையில் பயணிக்கும்.

நாளை மன்னார் ரயில் நிலையத்தில் இரவு 7.00 மணிக்கு புறப்படும் 5844 இலக்க ரயில், அநுராதபுரம் ரயில் நிலையத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை செல்லும் 4088 இலக்க இரவு தபால் ரயிலுடன் ஒன்றிணைக்கப்படும்.

நாளைமுதல் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரையில் புதிய ரயில் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

4082 என்ற இலக்க ரயில் நாளைமுதல் நாளாந்தம் யாழ். ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.25க்கு புறப்பட்டு மாலை 4.00 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.

இதே போன்று இலக்கம் 4088 என்ற ரயில் நாளை மறுதினம் முதல் நாளாந்தம் யாழ். ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.40க்கு புறப்பட்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை காலை 4.00 மணிக்கு வந்தடையும்.

நாளை 5845 என்ற இலக்க ரயில் நாளாந்தம் மதவாச்சி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 5.15 ற்கு சென்றடையும்.

இடை நிறுத்தப்பட்டிருந்த கண்டியில் இருந்து எல்ல ரயில் நிலையம் வரையிலும், எல்ல ரயில் நிலையத்தில் இருந்து கண்டி ரயில் நிலையம் வரையில் வார இறுதியில் சேவையில் ஈடுபட்டிருந்த 1027/1028 என்ற இலக்க ரயில்கள் எதிர்வரும் 3ம் திகதி தொடக்கம் சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே நிலையத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

Related posts: