மொட்டு சின்னத்திலேயே கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவார் – மஹிந்த ராஜபக்ஷ!
Friday, September 20th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு சின்னத்தில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்திருந்தார்.
இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (19) முற்பகல் மெதிரிகிரிய பௌத்த மத்திய நிலையத்திற்கு சென்று விகாராதிபதி வண.மெதிரகிரியே அஸ்ஸஜி தேரரை வழிப்பட்டு ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து அவர் சோமாவதி ரஜ மகா விகாரைக்கு சென்றிருந்தார்.இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது, சோமாவதி ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண. பஹமுனே சுமங்கள தேரரை வழிப்பட்டு ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.
பின்னர் , கோட்டாபய ராஜபக்ஷ திம்புலாகல ரஜமகா விகாரைக்கு சென்று விகாராதிபதி மில்லானே சிறியாலங்கார தேரரை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.அதனை தொடர்ந்து கந்துருவெல முஸ்லிம் பள்ளிவாசலுக்கு கோட்டாபய ராஜபக்ஷ சென்றிருந்தார்.
Related posts:
|
|
|


