முதியோர் நலன்கருதி வேலைத்திட்டங்கள் – தேசிய முதியோர் பொதுச் செயலாளர்!

Wednesday, January 8th, 2020

முதியோர் நலன் விடயங்கள் குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என தேசிய முதியோர் பொதுச் செயலாளர் அலுவலகத்தின் பணிப்பாளர் சமன் உடவத்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20 வருடத்திற்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் முதியோராக இருப்பார்கள் என ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை அவர்களை பாதுகாப்பதற்கான முறையான வேலைத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும், சுபீட்சமான நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் கிராம சேவையாளர் பிரிவுகள் தோறும் முதியோர் நலனோன்பு வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதையும் அவர் வரவேற்றுள்ளார்.

Related posts: