மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு!
Monday, August 26th, 2019
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 000க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள், தாமதமாக சிகிச்சைகளைப் பெறுவதே உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.
Related posts:
மேலும் புதிதாக 797 தேசிய பாடசாலைகள் – அரசாங்கம் அறிவிப்பு!
சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப...
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு!
|
|
|


