மின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!

Wednesday, September 18th, 2019


மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று (18) அழைக்கப்பட்டுள்ளார்.

மின்சார சபைக்கு மேலதிகமாக மின்சாரத்தைக் கொள்வனவு செய்தமை மற்றும் எரிபொருள் கொள்வனவு தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலான சாட்சிகளைப் பதிவுசெய்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி செயலணியின் கொள்கைவகுப்பு மேன்முறையீட்டு சபையின் தலைவர் K.A. சோமசிறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மின்சாரக் கொள்வனவின்போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலான சாட்சியங்களைப் பதிவுசெய்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts:

கால மாற்றத்திற்கேற்ப இளம் சிறார்களின் ஆற்றல்களும் வளர்க்கப்பட வேண்டும் – சிந்துபுரம் காந்திஜி சனசமூக...
கொரோனா தாக்கம் தொடருமானால் தேர்தல் அல்ல, எதையும் செய்யமுடியாது - சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாச...
சிறார்களிடம் கைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும் - பொலிசார் வலியுறுத...