மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
Saturday, August 31st, 2019
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களின் புழக்கமே அதிகமாக உள்ளதாகவும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் போன்ற இடங்களில் இவ்வாறு போலி நாணயத்தாள்கள் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார்எச்சரித்துள்ளனர்.
மேலும்ன் போலி நாணயத்தாள்கள் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் யாரேனும் செயற்படுவார்களாக இருந்தால் உடனடியாக தமக்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் போராட்டம் தொடரும் - மின்சார ஊழியர்கள்!
இருதய நோய்: ஒரு இலட்சத்திற்கும் மேலானோர் இலங்கையில் உயிரிழப்பு!
அனைத்து மக்களின் ஒத்துழைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம் – பிரதமர்!
|
|
|
சரியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், பயங்கரவாத எதிர்ப்பு ...
இலங்கையை மீள வகைப்படுத்துங்கள் - ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வேண்டுகோள...
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை - 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை...


