புகையிரத ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது நியாயமற்றது!

Thursday, October 3rd, 2019


புகையிரத  ஊழியர்களின் சம்பளப்பிரச்சினைக்குத் தீர்வாக இத்துறையைச் சேர்ந்த ஊழியர்களின் சம்பள முறைமை தயாரிப்பதற்காக சம்பள ஆணைக்குழுவில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் புகையிரத  ஊழியர்கள் தொழில் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முறை இதனால் பாதிக்கப்பட்டுள்ளது மாத்திரமின்றி புகையிரத திணைக்களத்திற்கு மாத்திரமன்றி நாட்டின் சகல பொருளாதார துறைகளுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாள் தோறும் 350 புகையிரத பயணங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் இலட்சக்கணக்கானோர் பயணிப்பதாகவும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

இதேவேளை, மலையக  புகையிரத பாதையில் பயணம் செய்யும் உடரட்ட மெனிக்கே புகையிரத ஹட்டன் புகையிரத நிலையத்தில் ஏழு தினங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த புகையிரதத்தில் உள்ள அஞ்சல் பொதிகள், ஹட்டன் தபால் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மலைநாட்டிற்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், உல்லாசப் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். மலைநாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு அதிகளவான பயணிகள் புகையிரதத்தில் பயணிப்பது வழக்கமாகும். புகையிரத வேலைநிறுத்தத்தினால் சில சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சுற்றுலாத் தொழில்துறையில் ஈடுபடுபவர்களும் பொருளாதார ரீதியில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்

Related posts: