பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் முற்றாக நிறுத்துவதற்கு தீர்மானம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
Wednesday, December 18th, 2019
ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு அருந்துவதற்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் வழங்கும் செயற்பாட்டை முற்றாக நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இதற்கமைய கண்ணாடி குவளைகளில் நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்களின் பாவனைக்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களை வழங்குதல் நீண்டகாலமாகவே இடம்பெற்றுவரும் வழக்கமாகும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
இந்த புதிய தீர்மானத்திற்கமைய இதுவரை காலமும் ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் சுற்றாடலில் ஒன்றுசேர்வது பெருமளவு குறைவடையும்.
ஏனைய அரச நிறுவனங்களும் இந்த நடைமுறையை வெகுவிரைவில் பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம்புவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
|
|
|


