பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை – காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ்!
Tuesday, September 3rd, 2019
பொலிஸாரும், இராணுவத்தினரும் தொடர்புடைய காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகம் செய்த பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தமது அலுவலகம் வெளியிட்ட இடைக்கால அறிக்கையில் குறித்த பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.
இதன்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்படக்கூடாது என்ற விடயமும் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பாதுகாப்பு அமைச்சு இதனைக் கருத்திற்கொள்ளவில்லை என்றும் சாலிய பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிபர் உயிரிழந்த சம்பவத்தில் தவறு நிகழ்ந்திருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை -- கல்வி அமைச்சர் !
யாழ். பல்கலையில் 1,390 மில்லியன் ரூபா செலவில் 4 பிரிவுக்குக் கட்டடங்கள் அமைப்பு!
மதவாதத்தை முதலீடாக்க நீதிபதியை விமர்சிப்பதை ஏற்க முடியாது - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாள...
|
|
|


