பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் அரச வைத்தியர்கள்!

Friday, October 11th, 2019

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தொழிற்சங்க போராட்டம் ஒன்றில் ஈடுபடபோவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள தீர்மானங்களை செயற்படுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் சட்டவிரோத இடமாற்றங்கள் தொடர்பில் தமது சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிட்டதாகவும் அதனை கருத்திற்கொண்டு சகல இடமாற்றங்களையும் இரத்து செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts:

பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களின் தொழில்துறையை ஊக்குவிப்போம் - ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!
சிறுவர்களிடையே கொரோனா பரவல் அதிகரிப்பு - கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ...
பாகிஸ்தானில் கடும் மழை - பாரிய அனர்த்த நிலைமை குறித்து அந்நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரீபிற்கு, ஆறுதல...

கல்வி திட்டங்களுக்கு அதி முக்கிய இடம் வழங்கப்படும் - செலவுத் திட்ட உரையில் நிதி அமைச்சர், பிரதமர் மஹ...
இரு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் – நாளைமறுதினம் பத...
உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது -. பெறுபேறுகளை ஓகஸ்ட் ந...