இரு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் – நாளைமறுதினம் பதிவியேற்கிறார் முன்னாள் பிரதமர் ரணில்!

Monday, June 21st, 2021

நாடாளுமன்ற அமர்வுகளை நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் நாளைமறுதினம் புதன்கிழமை ஆகிய இரு தினங்களிலம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கை நில மேம்பாட்டுக் கழக திருத்த சட்டமூலம் மற்றும் நில கையகப்படுத்தல் சட்டமூலத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் நாளையதினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மற்றும் செலவு போன்ற பல விடயங்கள் தொடர்பான விவாதங்கள் நாளைமறுதினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளைமறுதினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.

நாடாளுமன்றம் நாளையும் நாளைமறுதினமும் கூடவுள்ள நிலையில், நாளைமறுதினம் முற்பகல் 10 மணியளவில் அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்பதாக நாடாளுமன்ற உறுப்பினராக, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்குமாறு உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியாகியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: