நாங்கள் ஒரு போது சம்பந்தன் போன்று பொய் சொல்ல மாட்டோம் – நாமல் எம்பி தெரிவிப்பு!
Friday, October 25th, 2019
நாங்கள் ஒரு போது சம்பந்தன் போன்று பொய் சொல்ல மாட்டோம். எதிர்வரும் காலங்களில் ரிஷாட், ரவுப் ஹக்கீம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏறாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் நாமல் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கை இணைத்து பாலமாக அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இருந்து கிழக்கிற்கும், கிழக்கில் இருந்து வடக்கிற்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் வடக்கு – தெற்கிற்கு இடையில் இணைப்பினை ஏற்படுத்த மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 10 மாத குழந்தை உயிரிழப்பு !
இலங்கைக்கு வழங்கும் எந்தவித உதவிகளையும் எந்த நாடும் நிறுத்தவில்லை - சர்வதேச ரீதியில் சிறப்பான நட்புற...
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு துறையில் செயற்படுத்தக்கூடிய விசேட திட்டங்கள் தொடர்பில் ஆராய்...
|
|
|


